உடுவே தம்மாலோக தேரரைக் கைது செய்யுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கிருளப்பனை - ஹெலன் மெதினியாராம விகாரைக்குள் பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, கடந்த வழக்கு விசாரணையின் போது வாக்குறுதியளித்தபடி, தம்மாலோக தேரர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அனுமதியின்றி தற்போது வௌிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் அவரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.