கொழும்பில் வீடு வாங்க பணம் எவ்வாறு கிடைத்தது?



முறைகேடான முறையில் பணம் மற்றும் சொத்துக்களை சம்பாதித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
பண சலவை சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு 7 கிங்சி வீதியில் உள்ள வீடொன்றை மகிந்தானந்த 27 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்.
இந்த வீட்டை கொள்வனவு செய்ய பணத்தை சம்பாதித்த விதத்தை வெளியிட அவர் தவறியுள்ளார் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நிதியம் சம்பந்தமாகவும் சட்டமா அதிபர குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.