பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துக் கொண்டார்.
அந்த கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக மஹிந்த அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு சென்றுள்ளார்.
கூட்டம் நிறைவடைந்து மீண்டும் கொழும்பு திரும்பும் போது தியலும் நீர்வீழ்ச்சிக்கு அருகில் மஹிந்த சற்று நேரத்தை கழித்துள்ளார்.
அத்துடன் அவர் அங்கு நீர்வீழ்ச்சியை எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதியாக மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட மஹிந்த, தற்போது கடற்கரையிலும் மலைச்சாரலிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

