பங்களாதேஷ் அணி 176 ஓட்டங்கள்; மாலிங்க ஹெட்ரிக்



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 176 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

அதற்காக 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை அந்த அணி இழந்துள்ளது. 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக 34 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை வீழ்த்தினார் லசித் மாலிங்க. 

இந்த மூன்று விக்கட்டுக்களையும் அடுத்தடுத்து வீழ்த்தியன் மூலம் லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.