தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம்



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நினைவு சதுக்கத்திலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இதன்போது மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எஸ்.சிவமோகன், தருமலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா நகரிலுள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு அருகிலும் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.
தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இதன்போது, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்