(க.கிஷாந்தன்)
புத்தாண்டு மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஹோட்டன் சமவெளிக்கு அதிகளவில் சென்று வருகின்றனர்.
நுவரெலியாவில் இருந்து 22 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் பெருமளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.
இந்நாட்களில் ஓஹிய மற்றும் பட்டிபொல நுழைவாயிலுக்கு அருகில் நீண்ட வாகன வரிசை ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உலகமுடிவினை தெளிவாக பார்க்கக் கூடியதாக அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சுற்றுலா பயணிகளின் பொலித்தீன் பயன்பாடு தொடர்பில் ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் பொறுப்பாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
பொலித்தீன் பாவனையால் சுற்று சூழல் பாதிக்கப்படும் என்பதனை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment