இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை (4.4.2017) பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர், தெளிவுபடுத்தியதோடு, சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்தசந்திப்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

