(க.கிஷாந்தன்)
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஆலமரத்திற்கு அருகாமையில் 24.04.2017 அன்று இரவு 6.45 மணியளவில் நடமாடும் மெகி நூடில்ஸ் விற்பனை செய்யும் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதியும், உதவியாளரும் சிறு காயங்களுக்குள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
நுவரெலியா வசந்தகால நிகழ்விற்கு வருகை தந்த குறித்த பஸ் மீண்டும் நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்து லொறியின் வேகத்தினை கட்டு படுத்த முடியாமல் ஏற்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment