கடற்படை அதிகாரி திடீரென பலி



பூனேவ கடற்படை முகாம் அதிகாரி ஒருவர், படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வேளை, திடீரென விழுந்ததில் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தின் போது, படுகாயமடைந்த 37 வயதான குறித்த அதிகாரி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.