பணி இடைநீக்கம்



தொடங்கொட நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தொடங்கொட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சாஜன் ஒருவர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்ததாக கூறி மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த தினங்களில் ஊடகங்களில் செய்திகள் வௌியாகின. 

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வௌியாகிதோடு, மோட்டார் சைக்கிள் சாரதி தன்னைத் தாக்க வேண்டாம் என கோரியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தற்போது களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.