இறக்காம சமையல் உதவியாளர்கள் விளக்க மறியலில்



அம்பாறை – இறக்காமம் பகுதியில் உணவு விஷமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்ட போதும்,பிணை நிபந்தனையை சந்தேகநபர்கள் பூர்த்தி செய்யாமையினால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று அம்பாறை நீதவான் முன்னிலையில்ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் அம்பாரை நீதி மன்ற நியாதிக்கத்தைச் சேர்தோர் பிணையாளிகளாக இருக்க வேண்டுமென்ற நிபந்தைனையில் விடுவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.