ரணதுங்க குடும்பத்தார் இன்றி மஹிந்தவால் அரசியல் செய்ய இயலாது!



ரணதுங்க குடும்பத்தின் உறுப்பினர்கள் இன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அரசியல் செய்ய முடியாது என, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

அவரது தந்தையான ரெஜி ரணதுங்கவின் 80தாவது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

தனது தந்தை மரணித்த போது பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்ததாக குறிப்பிட்ட அவர், ஒரு அமைச்சுப் பதவியேனும் மஹிந்த ராஜபக்ஷவால் அவருக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இத்தகு புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே தனது தந்தை உயிர்நீத்ததாகவும் அர்ஜூன மேலும் கூறியுள்ளார்.