கல்விச் சாதனையாளர்கள் மாநகர விருது



suhaib umarlebbe

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வதியும் கல்வித் துறையில் 2016 ஆம் ஆண்டு சாதனை புரிந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் A.L.M.அஸ்மி அவர்களின் தலைமையில் 2017.04.18 ஆந் திகதி மாலை 5.00  மணிக்கு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம் பெற்றது.

அதில் 2016 August மாதத்தில் G.C.E (A/L) பரீட்சைக்குத் தோற்றி மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும். மற்றும் 2016 - December மாதத்தில் G.C.E ( O/L) பரீட்சைக்குத் தோற்றி அனைத்துப் பாடங்களிலும் விசேட சித்திகளைப் பெற்ற ( All.  -  "A" ) மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அந்நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களின் பெற்றார் பாதுகாவலர்களும்  கலந்து  சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2016 ஆம் ஆண்டின் கல்விச் சாதனை புரிந்த  சாதனையாளர்களை கௌரவிக்கும் மகத்தான நிகழ்வு முதன் முறையாக  அக்கரைப்பற்று மாநகர சபையினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.