உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயம், உள்ளூராட்சித் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் அதி தீவிரமாகப் பரவிவரும் மிகக் கொடூரமான டெங்கு நோய் மற்றும் வைரஸ் தொற்றுக்களில் இருந்து கிழக்கு மாகாண மக்களைப் பாது காப்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
அதன் பயனாக அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோயினை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்ததுடன், பொது மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் பொதுவிடங்கள், வீதிகள், பள்ளி வாயல்கள் மற்றும் வீடு வீடாகச் சென்றும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பட்டியடிப்பிட்டியிலுள்ள வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளிலுள்ள வடிகான்கள், டெங்கு நோய் ஏற்படுவதற்கு ஏதுவாகக் காணப்படும் இடங்கள் என்பன முற்றாக துப்பரவு செய்யப்படவிருக்கின்றன.
அவ்விடங்களை பேணிப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் கட்டாய பொறுப்பாகும். பொது மக்களின் பூரண ஆதரவு கிடைத்தால் மாத்திரமே டெங்கு நோயை எமது பிரதேசத்திலிருந்து முற்றாகக் கட்டுப்படுத்த முடியுமென்து குறிப்பிடத்தக்கதாகும்

