(வீடியோ) உலகிலிருந்து நிலவுக்கு மின்தூக்கி கண்டுபிடித்த தமிழன்: நாசா விருது



உலகத்தையும், நிலவையும் மின்தூக்கி (லிப்ட்) போன்ற அமைப்பின் மூலம் இணைக்கும் திட்டத்தை வௌியிட்ட தமிழ் மாணவனுக்கு நாசா பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.  

நாசா ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்கள் நிலவில் வாழத் தகுதியான சாத்தியக் கூறுகளை எப்படி அமைப்பது என்ற தலைப்பில் உலகளவில் உள்ள மாணவர்களுக்கு போட்டி வைத்தது. 

இதில் சாய் கிரண் என்னும் 12 ஆம் வகுப்பு மாணவர் கலந்து கொண்டுள்ளார். 

சிங்கப்பூரில் வசிக்கும் சாய் கிரணுக்கு பூர்வீகம் தமிழகத்தின் சென்னை தான். 

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்தே சாய் Connecting Moon, Earth and Space மற்றும் HUMEIU Space Habitats என்னும் பெயரில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார். 

இதன் முக்கிய அம்சமே பூமியையும், நிலவையும் லிப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான் 

இந்த ஐடியாவை அவர் நாசாவிடம் தெரிவித்துள்ளார். அவரின் இந்த செயலை பார்த்து வியந்த நாசா அவருக்கு இந்த போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கியுள்ளது. 

இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித போக்குவரத்துக்கு பாதை அமைக்க வேண்டும் என கிரண் தெரிவிக்கிறார். 

ஆனாலும், இந்த விடயம் பொருளாதார ரீதியாக தற்போது சாத்தியமில்லை. 

சென்ற மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த ஆராய்ச்சியை சாய் கிரண் தற்போது தொடர்ந்து நடத்தி வருகிறார்.