மேல் நீதிமன்ற நீதிபதியாக இராமநாதன் கண்ணனை நியமிப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பரிந்துரைகளை நாளை கூடவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் முன்வைக்கவுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் அமல் ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்த ஐந்து யோசனைகள் அண்மையில் கூடிய நீதித்துறை சேவைகள் சங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

