பாதுகாப்பு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உயர் பதவி ஒன்றை வழங்குவது தொடர்பான வாய்ப்புகள் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதானமாக சில பிரிவுகளை ஒழுங்குமுறையை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த பதவி பொன்சேகாவுக்கு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது குறித்து சரத் பொன்சேகாவிடம் அத தெரண தொடர்பு கொண்டு வினவியது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், அத்தியவசிய சேவைகளை மேற்கொள்ளும் போது அல்லது வேறு அவசர நிலைகளின் கீழ் ஏதேனும் அமைப்புகள் தலைதூக்குமாயின், அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியுமா என ஜனாதிபதி தன்னிடம் வினவியதாக அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், ஜனாதிபதியால் இது குறித்து உரிய பணிப்புரை வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment
Post a Comment