அமரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதியரசர் அகால மரணம்



அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதியரசரான சீலா அப்துஸ் ஸலாம், ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப் பட்டார். இவரின் உடம்பில் எஹவ்வகையான காயங்களும் இல்லையென்று பொலிசார் கூறுகின்றனர்.

இவரைக் காணவில்லையென இவரது குடும்பத்தவர், நேற்று முந்தைய தினம் முறைப்பாடு செய்திருந்தனர்.

1954ல் அமெரிக்கா, வொசிங்டன் D.C .இல் பிறந்த கறுப்பினப் பெண்மணியான இவர், 1974 இல் சட்டப் பட்டதாரியானார். பின்னாட்களில் பல்வேறு பதவிகளை வகித்த இவர்,நியுயோர்க் மேன்முறையீட்டு மன்றத்தினுடைய நீதியரசருள் ஒருவராகவும் 2013-2017 வரைப் பணி புரிந்தார்.