ஒன்றுகூடலும் பரிசளிப்பும்



(SUHAIB UMARULEBBE)

அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கத்தின் ஒன்று கூடல் இன்று அக்கரைப்பற்று TFC இன் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது. இக்கூட்டத்திற்கு அம்பாரை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். அத்தோடு, யூனியனின் தலைவர், செயலாளர், பொருளாளர், பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விஷேட பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் போன்றோர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு, இவ்வொன்று கூடலில் யூனியன் சம்பந்தமாக பலதரப்பட்ட விடயங்களும் பேசப்பட்டன.