சிராஜ் மசூர்
இது வில்பத்து சரணாலயத்தின் மேற்கு எல்லைக்குள்ளே இருக்கும் பூக்குளம் கிராமத்திற்கு நாங்கள் சென்றபோது எடுத்த படம்.
இது ஒரு கடலோரக் கிராமம். இதில் முஸ்லிம்கள் வசிப்பதில்லை. மாற்று இனத்தவரே உள்ளனர். புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளது. அரச அதிகாரிகளால் இங்கு தேர்தலும் நடத்தப்படுவது வழக்கம்.ஆனால், இது குறித்து இனவாதிகளும் சூழலியலாளர்களும் பேசாமல் இருப்பதன் உள்ளரசியல்தான் என்ன?
இதை விடுத்து, வில்பத்துவிற்கு வெளியே உள்ள மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்களது பூர்வீகக் காணிகளை வனமாக பிரகடனப்படுத்தியதன் மர்மம் என்ன? அதுவும் ரஷ்யாவில் வைத்து கைச்சாத்திட வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு ஏன் வந்தது? தவறு நிகழ்ந்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் இப்போது ஒத்துக் கொள்வது ஏன்?
போராடாமல் நியாயம் கிடைக்காது என்பதே இங்குள்ள அரசியல் யதார்த்தம். இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் ஏமாற்றப்பட்டு விடுவோம்.

