Suhaib
அக்கரைப்பற்று பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு விழா நிகழ்வு 2017.04.10 ஆந் திகதி அக்கரைப்பற்று மாநகர பொது விளையாட்டு மைதானத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணியளவில் உதைப்பந்தாட்ட நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளரான ஜனாப்.A.M.அப்துல் லத்தீப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
.
பிரதேச கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் அக்கரைப்பற்று ஹிஜ்றா கழகம் சகல நிகழ்வுகளிலும் முதல் நிலை வகித்து சம்பியனாக தெரிவாகியுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் இம்மைதானத்தில் பார்ப்போர் அரங்கு இல்லாதது ஒரு பெருங் குறையாகவும், பாலை வனம் போல் காட்சியளிப்பதாகவும், விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுவதாகவும் கூறினார்.
அக்கரைப்பற்று மாநகர பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களான பொது மக்கள் நிற்பதற்குக் கூட ஒரு நிழலில்லாத அவல நிலை தற்போது அம் மைதானத்தில் காணப்படுவதாக தற்போது எம்மால் நேரடியாக காணக்கூடியதாகவுள்ளது.
எதிர் காலத்தில் மைதானத்தின் ஓரங்களில் நிழல் மரங்களை நட்டு விளையாட்டு வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றோம்.

