(Fathima Aatham)
சம்மாந்துறை பிரேதேச நில அளவை காரியாலயம். இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் சொந்த நிதியில் பிரதேச நில அளவையலர்களின் பிரத்தியேக முயற்சியில் கட்டப்பட்டு 17.03.2017 அன்று Surveyor Suprindent M.T.M Rafeek இனால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடத்தை, குறித்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினரும், அவர் சார்ந்த கட்சயின் தலைவரான அமைச்சரும் மீண்டும் திறப்பதற்கான முஸ்திரிபுகளை செய்து வருவதாக நம்பரமான தகவல் வெளியாகி உள்ளது.
எம் சமுகத்தின் எத்தனையோ உரிமை மற்றும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் கிடக்க தாங்களுக்கு சமந்தமே இல்லாத ஏலவே திறந்து வைக்கப் பட்ட கட்டத்தை மீண்டும் திறக்க விரயமாக்கும் நேரத்தை மக்கள் குறைகளை நிவர்த்திக்க ஏன் செலவழிக்க கூடாது என சம்மந்தப் பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

