61 ஆடுகளுடன் மூவர் கைது



திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி, வேன் ஒன்றில் 61 ஆடுகளைச் கொண்டு சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கால்நடைகளை துன்புறுத்தும் வகையில் சிறிய வேனில் ஏராளமான ஆடுகளை கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர். 

இதற்கமைய, கந்தளாயில் இருந்து கொழும்புக்கு சென்று கொண்டிருந்த வேனில் இருந்த சாரதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சந்தேகநபர்கள் குருணாகல் மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.