மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் நேற்று யாழில்



சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்ட பேரணி யாழ். ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதி வழியாக பேரணி முற்றவெளி மைதானத்தை அடைந்தது.
இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துந்நெத்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனும் இதன் போது கலந்து கொண்டிருந்தார்