கிழக்கு மாகாண சபை முன்பாக நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்த நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெற்றபோது, மாகாண சபை முன்பாக கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு கோவையிடப்பட்டு, பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸாவினால் போராட்டம் நடத்தத் தடை விதித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நால்வர் இந்தக் கட்டளையைக் கிழித்தெறிந்து காலால் மிதித்ததாக திருகோணமலை நீதிமன்றில் தலைமையக பொலிஸாரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜரான கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நால்வரை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Post a Comment
Post a Comment