முறிகண்டியில் பலியெடுத்த ரயில்



முறிகண்டி பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டதில் குறித்த குடும்பத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, பொன்னகரை சேர்ந்த தவமன்றன் பாலசூரியர் என்ற 43 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து குறித்த நபரின் சடலம் ரயிலில் ஏற்றிச் செல்லப்பட்டு மாங்குளம் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.