“இலங்கை பௌத்த வரலாற்றின் பொற்கால அத்தியாயத்தின் ஆரம்ப அடையாளமாகவே, இரண்டாயிரத்து ஐநூற்று அறுபத்தோராவது ஸ்ரீ புத்த வருடம் உதயமாகிறது. புத்தபிரானின் புனித பாதங்கள் மும்முறை பதிந்த புனித பூமியாகிய நமது தாய்நாட்டில், ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் விழாவை நடத்தத் தெரிவு செய்துள்ளமை நாம் பெற்ற அரிய பாக்கியமெனக் கருதுகிறேன்.
அந்த வாய்ப்பானது, பௌத்த தர்மத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்றதன் பின்னர், எமது நாடு பெற்ற மிகச் சிறந்த சர்வதேச வெற்றியாகும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ள வெசாக் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் விழாவின் முதன்மைப் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டமைக்கு அண்மைக் காலத்தில் நாம் பெற்றுக் கொண்ட வெற்றிகளும் களம் அமைத்துக் கொடுத்துள்ளன.
அந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து மக்களும் தமது வாழ்நாளில் ஒரு யுகத்தை மெருகூட்டிய புண்ணியவான்களாக வரலாற்றில் இணைந்துகொள்வார்கள். ‘சமூக நீதி மற்றும் பேண்தகு உலக சமாதானத்துக்கான பௌத்த தர்மத்தின் போதனைகள்’ என்பதே, இலங்கையில் நடத்தப்படும் இந்த சர்வதேச வெசாக் விழாவின் தொனிப்பொருளாகும். சமத்துவமே சமூக நீதியின் அடித்தளமாகும். புத்தபிரானின் காலத்திலும், அடிப்படைக் கோட்பாடாக சமத்துவம் எனும் உலக நீதியே இருந்துவந்தது. இன்றைய உலகம் மிக உருக்கமாக வேண்டி நிற்பதும் அந்த சமத்துவத்தையேயாகும்.
முப்பெரும் மங்கல நிகழ்வுகளில் ஒன்றாகிய புத்தபெருமானின் முக்திப்பேற்றுடன் ஆரம்பமாகும் எமது தேசத்தின் வரலாறானது, இம்முறை சர்வதேச வெசாக் விழா இலங்கையில் நடத்தப்படுவதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கின்றது. உலகவாழ் பௌத்த பெருமக்களுக்கு மங்களகரமான வெசாக் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment