வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் மறியல் போராட்டம் காரணமாக வட மாகாண சபையின் இன்றைய அமர்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் இன்றைய அமர்வு யாழ். கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் இன்று காலை ஆரம்பமானது.
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மாகாண சபையின் நுழைவாயிலை மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமையால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாண சபைக்குள் செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய முருகப்பெருமாள் மதிவானன் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment