அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச நெருக்கடிக் குழு, ஜனநாயகச் சீர்திருத்தங்களின் இயக்கத்தை மீளக் கொண்டுவருவதற்காக, பரிந்துரைகள் பலவற்றையும் முன்வைத்துள்ளது. அவற்றில் முக்கியமான சில பரிந்துரைகள் இவை:
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குக. இதில் அனைத்துப் பிரஜைகளதும் சமூகங்களதும் உரிமைகள், சமமாக மதிக்கப்பட வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பில் இது வெற்றிபெறுவதற்கான பிரசாரம், ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகள் விடுவிக்கப்படுவதைத் துரிதமாக்குவதோடு, அவற்றை மேலும் வெளிப்படையாக்குக. உள்ளூர் வணிகங்களைப் பாதிக்கும் வகையில், விவசாயம், பண்ணை, கடைகள் போன்றவற்றில் இராணுவச் செயற்பாட்டை நிறுத்துக.
தமிழ், முஸ்லிம் இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிப்பதில், இராணுவப் பங்கெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருக. சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகளை அச்சுறுத்தும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துக.
சுயாதீனமான, அனுபவம் வாய்ந்த ஊழியர்களோடு, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு முக்கியமான பங்கை வழங்கும் வகையில், காணாமல் போனோருக்கான அலுவலகத்தை, உடனடியாக அமைக்குக. நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அங்கிகரித்து, அதன் பரிந்துரைகளைப் பயன்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான திட்டத்தை விருத்தி செய்க.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாது செய்து, பரவலாகக் காணப்படும் சட்டவிலக்களிப்பை நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துக. பெப்ரவரி 2015இல் நடைபெற்ற திணைசேரி பிணைமுறி, ஊடகவியலாளர்களையும் மாணவர்களையும் கொன்ற தொடர்ச்சியான பல சம்பவங்களின் இராணுவப் புலனாய்வாளர்களின் பங்களிப்பு என்ற குற்றச்சாட்டு, மூதூர் உதவிப் பணியாளர்களின் படுகொலை, திருணோமலை மாணவர்களின் படுகொலை ஆகியவற்றை விசாரிக்குக.


Post a Comment
Post a Comment