ரஜனியைச் சந்தி்த்த நக்மா



நடிகர் ரஜினிகாந்தை மகளிர் காங்கிரஸ் பொதுசெயலாளர் நக்மா இன்று சந்தித்து பேசினார். சென்னை போயஸ்காடனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ரஜினிகாந்த் - நக்மா நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆனது. பல ஆண்டுகள் கழித்து நக்மா ரஜினியை சந்தித்துள்ளார். இன்றைய சந்திப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மீண்டும் இணைந்த பாட்ஷா கூட்டணி என்று நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகின்றனர். 

ரஜினி உடனான இந்த சந்திப்பு குறித்து நக்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரஜினி என் நண்பர். அவரை நட்பு ரீதியாக தான் சந்திக்க வந்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.  ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அவர்  அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்றார்.