ஹபுத்தலை பகுதியில் வௌிநாட்டுப் பிரஜைகளைத் தாக்கி அவர்களிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 28ம் திகதி காலை ஹபுத்தலை நகரின் ஊடாக பயணித்த வௌிநாட்டுப் பிரஜைகள் மூவர் தாக்கப்பட்டனர்.
முச்சக்கர வண்டி மூன்றில் வந்த சிலரே இவ்வாறு அவர்களைத் தாக்கியுள்ளதோடு, அவர்கள் வசம் இருந்த பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள மவுன்டண் சைக்கிள் பயிற்சிப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த வௌிநாட்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அன்றையதினமே ஒருவரைக் கைதுசெய்தனர்.
இதனையடுத்து சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் 12 பேர் கைதுசெய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment