வருடக்கணக்கில் காதலித்து வந்த தனது காதலி தொடர்பை முறித்துக்கொண்டதில் ஆத்திரமுற்று காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வௌியிட்ட காதலன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீர்க்கொழும்பு பதில் நீதவான் கே பீ குணதாச இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேகநபரான காதலன் தணமல்வில பிரதேசத்தை சேர்ந்த 24 வயதானவராவார்.
பல வருடங்களாக தனது காதலியின் கல்விக்கு மற்றும் குடும்ப தேவைகளுக்காக பணம் வழங்கியுள்ளதாக குறித்த நபர் இதன் போது தெரிவித்துள்ளார்.
பின்னர் உயர் கல்விக்காக குறித்த பெண் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியுள்ளதை தொடர்ந்து குறித்த பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் , இளைஞரின் தொடர்பை முறித்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஆத்திரமுற்ற இளைஞர் , தனது காதலியின் புகைப்படத்தை கணணியின் மூலம் நிர்வாணமாக வடிவமைத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
அதில் , குறித்த பெண்ணின் கைப்பேசி இலக்கமும் மற்றும் அவரின் தாயின் தொலைப்பேசி இலக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த பெண் மற்றும் அவரின் தாய் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே குறித்த பெண்ணின் காதலன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment