திருமலைச் சிறுவன் நீரில் மூழ்கினார்



(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மட்கோ கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச்சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி இன்று (11) காலை 11.30 மணியளவில் வபாத்தாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, மட்கோ, முஹம்மதிய்யா நகரைச் சேர்ந்த டி.எப்.சர்பான் (16வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் நீராடச்சென்ற போது நண்பரொருவர் நீரில் மூழ்கியுள்ளார். இவரை காப்பாற்றிய வேளை அவர் தப்பியதுடன் இவர் நீரில் மூழ்கியதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் ஜனாஸா திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.