அக்கரைப்பற்றில் ஊர் காவல் படை வீரர் மீது தாக்குதல்



நேற்றிரவு, வெள்ளப் பாதுகாப்பு  சுற்றுக் கடமையில் ஈடுபட்டிருந்த, ஊர் காவற் படையினர் மீது,மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திருந்து கடைமைக்குச் சென்ற இரண்வடு ஊர் காவவற் படையினரும்,ஒரு பொலிஸ் அதிகாரியும் ரோந்துக் கடைமையில் ஈடுபட்டுள்ளனர். முன்னே பொலிஸ் அதிகாரி செல்ல, பின்னால் பொலிஸ் உதவியாளர்களான,ஊர் காவற் படையினர் சென்றுள்ளனர்.இத்ததைய சந்தர்ப்பத்தில், இனந் தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதல்காரர்களை நோக்கி,ஊர்காவல் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுமிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.விசாரணகைளை, அக்கரைப்பற்றுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.