மருதமுனை யுனிவர்ஸ் அரை இறுதிக்குள்



ஜெம்சித் (ஏ) றகுமான்

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திக் கொண்டிருக்கும் சம்பியன் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 02 வது கால் இறுதி ஆட்டம்  மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்களில் நடை பெற்றது.

இரண்டாவது காலி இறுதி ஆட்டத்தில் மருதமுனை யுனிவர்ஸ் வி.க எதிர்த்து சாய்ந்தமருது ஹொலி கீரோஸ் வி.க ஆடியிருந்தது.ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் 4 ற்கு 1 என்ற அடிப்படையில் மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது.