சித்தாண்டியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதில் ஒருவர் உயிரிழப்பு



murshid
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி-4, உதயன்மூலை பாடசாலை வீதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழ்துள்ளதாக ஏறாவூர் பெலிசார் தெரிவித்தனர்.
நேற்று (28) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை குறித்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்
.இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் மூவருக்கு இடையில் இடம்பெற்றுள்ளதுடன் இருவர் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் கௌரவ றிவ்வி நீதிபதி சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.