விபத்தில் பெண் பலி; இருவர் படுகாயம்



தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, களுத்துரை தெற்கு பிரதேசத்தில், கனரக வாகனமும் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தான வீடொன்றுக்கு பயணித்துக்கொண்டிருந்த வானே இவ்வாறு கனரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வானின் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். வானின் சாரதி உட்பட இருவர் கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.