கடல் எல்லையைக் குறிக்கும் இலங்கையின் பெயர்ப்பலகை!



கடல் எல்லையைக் குறிக்கும் விதத்தில் பெயர்ப்பலகையைத் திறந்துள்ளது, இலங்கை. இந்தியாவின் எல்லைப் பகுதியான தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை, கடல்நீரின் பெருக்கத்தைப் பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லாமல் இருக்கவும், இலங்கையிலிருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும், நமது எல்லைப் பகுதியான 5-ம் மணல் திட்டில், ‘இந்தியா’ என்ற பெயர்ப்பலகையை இந்தியக் கடற்படையினர் ஏற்கெனவே வைத்துள்ளனர்.

தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரிலிருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டுக் கொடியுடன், ‘இலங்கை’ என எழுதப்பட்ட பெயர்ப்பலகையை வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாகக் குற்றம் சாட்டி, அவர்களைக் கைதுசெய்வதும், படகுகளைப் பறிமுதல்செய்வதும், கொடூரமாகத் தாக்குவதும் வாடிக்கையாகிவருகிறது. இந்த நிலையில், இந்தப் பெயர்ப்பலகை எந்த அளவுக்குப் பயன்தருமோ!