பட்டதாரி நியமனங்களின் போது தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பதோடு தாமதமில்லாமல் உங்களுக்கான தொழிலை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
காரைதீவில் 64ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் இன்று நடந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் காரைதீவில் பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


Post a Comment
Post a Comment