தமிழகத்தில் சென்னை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோடை காலத்திலேயே முதல் முறையாக நேற்று சென்னையில் 41.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.
இன்று சென்னையில் 40.9 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பாக அதிகபட்சமாக சென்னையில் 45 டிகிரி வெயில் 2003 மே 31ஆம் தேதி பதிவானது.
இன்று மாநிலத்திலேயே அதிக அளவாக திருத்தணியில் 45 டிகிரி செல்சியசும் வேலூரில் 43.5 டிகிரி செல்சியசும் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் சில உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
இந்தக் கடுமையான வெப்பநிலை தமிழ்நாட்டில் மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment