ஏறாவூரில் காணாமல்



ஏறாவூர் பகுதியிலிருந்து கடலுக்கு சென்று காணாமல்போனதாக கூறப்பட்ட 19 படகுகளும் கரைதிரும்பியுள்ளன.
மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னகுடா மற்றும் சவுக்கடி பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 19 படகுகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குறித்த படகுகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்த நிலையில், குறித்த 19 படகுகளும் கரை திரும்பியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.