(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று தனது 80 ஆவது வயதில் இன்று நீர் கொழும்பில்(04) காலமானார்.
சுமார் அரை நுாற்றாண்டு காலம், இலங்கை வானொலியில் பணிபுரிந்த முதுபெரும் செய்தி அறிவிப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
யாழ்பாணம் உடுப்பிட்டியில் எஸ்.ஆர்எஸ் நாதனுக்கும் திருமலை நீலாயதாட்சிக்கும் இரண்டாம் மகளாக 1937 ம் ஆண்டு பிறந்த இவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இவர் அறியப்படுகிறார்.
சற்சொரூபவதி நாதன் தனது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று அறிவியல் பட்டதாரியானார். பின்னர் விஞ்ஞான ஆசிரியையாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ள அவர், 1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார்.
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் சற்சொரூபவதி நாதன், ஜவகர்லால் நேரு விருது (1958), சிறந்த செய்தி
அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (1995), வானொலி பவள விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இலங்கை வானொலி செய்திப் பிரிவிலும் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றியவர் இவர் என்பது குறிப்பிடதக்கது.
இவரது நல்லடக்கம் நாளை காலை கனத்தை இந்து மயானத்தில் இடம் பெறும்
#சிலோன் 24 இணையத் தளம் தனது ஆழ்ந்த இரங்கல்களை காணிக்கையாக்குகின்றது.


Post a Comment
Post a Comment