”ஹெலோவால்” 5 மாதங்களில் 20 மரணங்கள்



அவதானமின்றி அலைபேசி பயன்படுத்துவதன் காரணமாக, கடந்த 5 மாதங்களில் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, ரயில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி அநுர பிரேமரத்ன, நேற்று(12) தெரிவித்தார்.
அபாயங்கள் நிறைந்த இடங்களில் செல்பி எடுத்தல், இயர்போன்  அணிந்துகொண்டு அல்லது அலைபேசியில் கதைத்துக் கொண்டு ரயில் கடவை மற்றும் பாதையில் பயணித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட விபத்துகளால் இந்த உயிரிழிப்புகள் ஏற்பட்டதாக, அவர் கூறினார்.
இந்த மரணங்களில் அதிகளவானவை, கொள்ளுப்பிட்​டி - கல்கிஸை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த விபத்துகள் அனைத்தும்,  வார இறுதி விடுமுறை நாட்களிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிகமான மரணங்கள், ரயில் மிதிபலகையில் நின்று செல்பி எடுப்பதனால் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பயணிகளில் அவதானமற்ற தன்மை காரணமாக இந்த விபத்துகள் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார்