களினி பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று மற்றும் வயிற்றோட்டம் காரணமாக, இம்மாதம் 27ஆம் திகதி வரை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் செனவிரத்ன அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக 900 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பீடாதிபதிகளுடன் இன்று காலை நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதிகளுடன் தங்கியிருக்கும் மாணவர்களை இன்று நண்பகலுடன் வெளியேறுமாறும் 26 ஆம் திகதி விடுதிகளுக்குத் திரும்புவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment