சுயாதீன தொலைக்காட்சி சேவையின் 38ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஐந்து மாடிகளைக்கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (14) முற்பகல் திறந்துவைத்தார்.
கட்டடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றைப் பதிவு செய்தார்.
தெற்காசியாவின் முதலாவது வர்ணத் தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் தொல்பொருள் கூடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.


Post a Comment
Post a Comment