மஹியங்கனையில் காத்தான்குடி வர்த்தக நிலையத்துக்கு தீ வைப்பு



மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன்று இன்று (09) மாலை தீக்கிரையாகியுள்ளது.
காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
எவ்வாறு தீ பரவியது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.