பெரிய கல்லாற்றில் சிறுவன் நீரில் மூழ்கினான்



மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில், சிறுவன் ஒருவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான் என, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு கடலம்மன் ஆலய பகுதியில் உள்ள நீர் ஓடையில், குறித்த சிறுவன், நேற்று (22) குளித்துக்கொண்டிருந்தபோது நீரிழில் மூழ்கி உயிரிழந்துள்ளளான் என, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன், பெரியகல்லாறு 01ஆம் வட்டாரத்தை சேர்ந்த பாஸ்கரன் உதயகாந்தன் என்னும் 10 வயதுடைய சிறுவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.