(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம பகுதியில் கெப்ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கிச் சென்ற கெப்ரக வாகனமே 10.06.2017 அன்று மாலை 3.30 மணியளவில் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்தில் சாரதியான தந்தையும், தாயும் பிள்ளைகள் இருவருமே பயணித்துள்ளதாகவும், விபத்தில் தாயும் பிள்ளைகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னால் சென்ற வாகனத்தை அதிக வேகமாக சென்று முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், விபத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment