போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மறியல்



பொரள்ளை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 

களவு சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவை நீதிமன்றம் விதித்துள்ளது. 

இடிதாங்கி மற்றும் ஐந்தரை லட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளை களவாடிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் ஆஜரானார். 

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பர்ணான்டோவுக்கு சொந்தமான குறித்த பொருட்களை அவரது பணியாளர்கள் இருவர் கொழுப்புக்கு கொண்டு சென்ற போது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பொருட்கள் கொண்டு வரப்பட்ட வாகனங்களை பரிசோதிக்கும் தோரணையில் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.