இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மோதும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று (30) காலை 10.00 மணிக்கு காலியில் ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து ஒருநாள் தொடரிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன.
இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் காலி மைதானத்தில் நடைபெறுகின்றன. மீதமுள்ள மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
சிம்பாப்வே அணியுடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. அதுவும் முதலிரண்டு போட்டிகளுக்கான அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திஸர பெரேரா, சந்திமால், நுவன் குலசேகர ஆகியோருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அத்தோடு பயிற்சியின் போது காயமடைந்த சீகுகே பிரசன்னவுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒழுக்காற்று விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள லசித் மலிங்க அணியில் இடம்பெற்றுள்ளார். அதன்படி அஞ்சலோ மெத்தியூஸ் தலைவராகவும் உபுல் தரங்க உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது


Post a Comment
Post a Comment